தமிழகத்தில் அரியலூர், தருமபுரி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவு

தமிழகத்தில் அரியலூர், தருமபுரி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது.

Update: 2020-12-12 16:04 GMT

சென்னை: 

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

புதிதாக தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 690 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 759 ஆண்கள், 459 பெண்கள் என மொத்தம் 1,218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், கர்நாடகாவில் இருந்து வந்த இருவரும், அசாம், பீகார், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த தலா ஒருவரும், 12 வயதுக்கு உட்பட்ட 56 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 251 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இன்று  36 மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரியலூரில் புதிய பாதிப்பு இல்லை.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 345 பேரும், கோவையில் 120 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 72 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இருவரும், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 998 ஆண்களும், 3 லட்சத்து 15 ஆயிரத்து 661 பெண்களும், 3–ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 28 ஆயிரத்து 229 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 663 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த பட்டியலில், சென்னையில் 6 பேரும், நாகப்பட்டினத்தில் இருவரும், கோவை, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, மதுரை, சேலத்தில் தலா ஒருவரும் என 7 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 30 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு இல்லை. இதுவரையில் 11 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 928 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,014 பேருக்கும், ரெயில் மூலம் வந்த 428 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 429 பேருக்கும், கடல் மார்க்கமாக வந்த 34 பேருக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,296 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 1,296 பேர் இன்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 359 பேரும், கோவையில் 104 பேரும், செங்கல்பட்டில் 85 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 602 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 10 ஆயிரத்து 208 பேர் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  அரியலூர், தருமபுரி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. மாவட்டம் வாரியாக  கொரோனா பாதிப்பு, சிகிச்சையில் உள்ளவர்கள் விவரம் வருமாறு:-

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புடிச. 12
மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புடிச. 12
செங்கல்பட்டு48,64747,41350473072
சென்னை2,19,5262,12,3903,2263,910345
கோயம்புத்தூர்50,31748,696992629120
கடலூர்24,42024,0707227814
தருமபுரி6,2256,046128518
திண்டுக்கல்10,58310,22815919628
ஈரோடு13,00712,50935614241
கள்ளக்குறிச்சி10,72610,598201081
காஞ்சிபுரம்28,11727,46322443041
கன்னியாகுமரி15,97515,56815325419
கரூர்4,9694,8061154812
கிருஷ்ணகிரி7,6197,33616911417
மதுரை20,08919,38426144441
நாகப்பட்டினம்7,8597,60213012718
நாமக்கல்10,75010,47716810536
நீலகிரி7,6627,4391814215
பெரம்பலூர்2,2502,2245212
புதுகோட்டை11,26011,0238315415
ராமநாதபுரம்6,2556,100241311
ராணிப்பேட்டை15,74815,4848517915
சேலம்30,70929,73552644840
சிவகங்கை6,4076,2315012611
தென்காசி8,1637,955531554
தஞ்சாவூர்16,70616,34712823112
தேனி16,72216,4606220013
திருப்பத்தூர்7,3427,156621248
திருவள்ளூர்41,70940,60044566472
திருவண்ணாமலை18,88118,4811242769
திருவாரூர்10,66310,45210410721
தூத்துக்குடி15,85315,58412914015
திருநெல்வேலி15,04114,67515621014
திருப்பூர்16,14215,40053121165
திருச்சி13,73013,37917917217
வேலூர்19,77119,08834533828
விழுப்புரம்14,77014,5778311010
விருதுநகர்16,10415,73813822817
விமான நிலையத்தில் தனிமை928924310
உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை10141,0031011
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை7,97,6937,75,60210,20811,8831,218

மேலும் செய்திகள்