தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; கட்டுகட்டாக பணம் சிக்கியது

போக்குவரத்து சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-12-12 07:30 GMT
சென்னை,

போக்குவரத்து சோதனைச் சாவடிகளில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக தகவல் வெளியானதையடுத்து. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை பூந்தமல்லி தேசிய நெஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடி, தேனி, ஓசூர், ஊத்துக்கோட்டை, சேலம், பொள்ளாச்சி உள்ளிட்ட 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனையால் சில சோதனைச் சாவடிகளில் வாகனங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்