தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 17 பேர் மரணம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2020-12-11 13:42 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது.  தமிழகத்தில் இன்று 1,235 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் கர்நாடகா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த தலா ஒருவர் அடங்குவர்.

இதேபோன்று தொற்றால் ஆண்கள் 772 பேர், பெண்கள் 463 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  கொரோனா சிகிச்சைக்கு பின்னர் இன்று குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,311 ஆக உள்ளது.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 74 ஆயிரத்து 306 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரத்து 475 ஆக உள்ளது.  இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 239 ஆகவும் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்து 202 ஆகவும் உள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,870 ஆக உள்ளது.  10,299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்