தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம், நோயாளிகள் அவதி ;அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆதரவு
தமிழகம் முழுவதும் நேற்று தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். இந்த வேலை நிறுத்தத்துக்கு அரசு டாக்டர்கள் கறுப்பு ‘பேட்ஜ்‘ அணிந்து ஆதரவு தெர
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். இந்த வேலை நிறுத்தத்துக்கு அரசு டாக்டர்கள் கறுப்பு ‘பேட்ஜ்‘ அணிந்து ஆதரவு தெரிவித்தனர்.
வேலை நிறுத்தம்ஆயுஷ் மருத்துவதுறைகளை ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து ஒரே மருத்துவம் என மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் மாதம் 19–ந்தேதி சித்தா டாக்டர்களும், அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதைகண்டித்து இந்தியா முழுவதும் கடந்த 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆயுஷ் மருத்துவதுறைகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் கொரோனா சிகிச்சைகளை தவிர்த்து மற்ற அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு பேட்ஜ்இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக இந்திய பல் மருத்துவ சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அரசு டாக்டர்கள் கருப்பு ‘பேட்ஜ்‘ அணிந்து இந்திய மருத்துவ சங்கத்தினரின் வேலை நிறுத்தத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, செயலாளர் டாக்டர் ஏ.கே.ரவிகுமார், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முத்துராஜா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
இந்தியா முழுவதும் ஆயுஷ் மருத்துவதுறைகளை ஆங்கில மருத்துவத்துடன் (அலோபதி) இணைப்பதையும், சித்தா டாக்டர்கள், 60–க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதி அளித்ததையும், கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். முறையான பயிற்சி இல்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டால், பொதுமக்களின் உயிர்களுக்கு அது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
நோயாளிகள் அவதிஇந்திய மருத்துவத்தின் வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்திய மருத்துவம் என்பது இல்லாமல் அனைத்தும் ஆங்கில மருத்துவமாகவே மாறும். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28–ந்தேதி சென்னையில் நடைபெறும் இந்திய மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் பல மருத்துவமனைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பலர் அவதிக்கு உள்ளாகினர். பலர் மருத்துவமனைக்கு வந்து பின்னர் வேலை நிறுத்தம் என்பதால் திரும்பச் சென்றனர்.