தேவேந்திரகுல வேளாளர் என பெயரிட பரிந்துரை: எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அமைப்பினர் நேரில் நன்றி
மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பெயரிட பரிந்துரை செய்யப்படும் என்று அறிவித்ததற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பல்வேறு அமைப்பினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.
சென்னை,
மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அவர்களின் விவரம் வருமாறு:-
சென்னை, தலைமைச்செயலகத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் காமராஜ், வடிவேல், சண்முகவேல், ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரிகள் கருப்பையா, இருளாண்டி, சுந்தரராஜன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தங்ககலியபெருமாள், ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் ராஜேந்திரன், தனசேகரன், சங்கரன்.
தேவேந்திர குல மள்ளர் சேம்பர் ஆப் காமர்ஸ், தமிழ்நாடு அமைப்பைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தேவேந்திர சட்டப் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த எஸ்.பாஸ்கர் மதுராம், மருதநில மக்கள் பண்பாட்டுக் கழகத்தைச் சார்ந்த அ.வியனரசு, மூவேந்தர் புலிப்படையைச் சார்ந்த சி.பாஸ்கர், டி.கே.வி. சமூக வழக்கறிஞர்கள் பேரவையைச் சார்ந்த பி.கனகராஜ், தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசு ஊழியர் நல சங்கம் ஏ.கோதண்டராமன், சோலை பழனிவேல் ராஜன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் மாரியப்பாண்டியன், அகில இந்திய மள்ளர் எழுச்சிப் பேரவையைச் சார்ந்த மனுநீதிச் சோழன், தேக்கப்பட்டி பாலசுந்தரராசு பேரவையைச் சார்ந்த தேக்கப்பட்டி தெய்வேந்திரன்.
தேவேந்திரகுல சமூகம் ஆம்புலன்ஸ் முனியாண்டி, தேவேந்திர வேளாளர் நலச்சங்க நிர்வாகிகள் செ.செல்லதுரை, டி.கே.ஆர்.குருசாமி, டாக்டர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள், சகோதர மறுமலர்ச்சி நலச் சங்கம் ரேவதி ராஜேஷ், பன்னீர்செல்வம், அர்ச்சுனன், ராமையா, ரவி சங்கர், குளத்தூர் வட்டார தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் பத்மனாபன், சோமசுந்தரம், தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம், பல்லாவரம் ரவிகுமார், மாரிமுத்து, ஐயப்பன், சுப்பையா, தங்கராஜ், தேவேந்திர பேரவை, ஆவடி, டாக்டர் எஸ்.ஹரிகோவிந்த், வேளச்சேரி தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் முருகேசன், கீழ்க்கட்டளை தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் ஆதினமிழகி, போரூர் தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் நெப்போலியன், சிவகாமி நகர் தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் முனியாண்டி, அரசியல் அதிகார அமைப்பு பேராசிரியர் பேச்சிமுத்து ஆகிய பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் முதல்-அமைச்சரை சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
உடன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே. மாணிக்கம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. மனோகரன் ஆகியோர் இருந்தனர்.