கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான் - மு.க.அழகிரி

கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான் என்று மு.க.அழகிரி கூறினார்.

Update: 2020-12-10 06:52 GMT
மதுரை, 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், “ தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதமாக உள்ளது. அதைப்பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். ரஜினியுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது ” என்று கூறினார்.

மேலும் செய்திகள்