தமிழகத்தில் மேலும் 1,236-பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று 1,236 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 92 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 333 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 903 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 65,186 ஆகும்.
கொரோனா தொற்று குணம் அடைந்து இன்று ஒரு நாளில் மட்டும் 1,330 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 70 ஆயிரத்து 378 -ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 11,822 ஆக உள்ளது.