டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 % தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 % தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை,
டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 % தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். மசோதா தாக்கல் செய்யப்பட்டு 8 மாதமாக கிடப்பில் இருந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், அனைத்து கல்வி தகுதிகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை பெற முடியும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது.