வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார்.
சென்னை,
வங்க கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இதன்படி இன்று சென்னை கொளத்தூர், பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிவாரண பொருட்களாக பாய், போர்வை உள்ளிட்டவை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.