நெல்லை மேலப்பாளையத்தில் டிசம்பர் 6 கருப்பு நாளாக கடைப்பிடிப்பு

நெல்லை மேலப்பாளையத்தில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-12-06 08:54 GMT
நெல்லை,

திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் பகுதியில், டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. 

மேலும் ஆட்டோக்கள் மற்றும் வேன்கள் இயக்கப்படவில்லை. இதனால் மேலப்பாளையத்தில் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. பாதுகாப்பு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர் பகுதியில் மத்திய அரசு நிறுவனங்கள், முக்கிய கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்