ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு
ராமநாதபுரத்திற்கு அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிப்பதால் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது.
ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ., பாம்பனுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணிநேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.