புரெவி புயல்: தூத்துக்குடி-ராமநாதபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புரெவி புயல் ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே கரையைகடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-04 04:05 GMT
சென்னை,

புரெவி புயல், நேற்று மாலை 5.30 மணி அளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.  

பாம்பனில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்த புரெவி புயல், மெதுவாக நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எனவும்  ஒரு சில இடங்களில் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் புரெவி புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 6 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை இன்னும் 6 மணி நேரத்திற்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்