புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம், நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என அறிவிப்பு
புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம், நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, வடலூரில் கனமழை. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை செய்யத் தொடங்கியது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம், நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே. புரெவி புயல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் அத்தியாசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், மின்கம்பங்கள் மின்கம்பிகள், தெருவிளக்குகள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் எனவும், பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் மரங்களுக்கு கீழ் ஒதுங்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.