புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தூத்துக்குடி விமான நிலையம் நாளை மதியம் 12 மணி வரை மூடல்

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மதியம் 12 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-03 17:21 GMT
தூத்துக்குடி,

புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. புயல் வலுவிழந்தாலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மதியம் 12 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், நாளை காலை 10 மணி முதல்  மாலை 6 மணி மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்