ஸ்டாலினை சந்திக்கிறார் தினேஷ் குண்டுராவ்: தொகுதிகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல்

திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்கிறார்.

Update: 2020-12-02 04:14 GMT
சென்னை,

தமிழகம், புதுச்சேரி சட்டப் பேரவை பொதுத்தேர்தல் 2021-ல்வர உள்ளதால் அதனை எதிர்கொள்ளும் விதமாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். 

அதில், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலமாக கட்சி மேலும் வலிமை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக ஆட்சியால் தற்போது பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற வகையில் வருகிற சட்டமன்ற தேர்தல் அமைய காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் என்றார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்வது, போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி பங்கேற்கின்றனர். 

மேலும் செய்திகள்