குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் தொடர்ந்து கேள்வி எழுப்புவது ஏன்? கார்த்தி சிதம்பரம் எம்.பி கேள்வி
குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் தொடர்ந்து கேள்வி எழுப்புவது ஏன்? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர். திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்?
பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு; திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம். எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல”என்றார்