தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, புதுக்கோட்டை ,நாகை, சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும். இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு ,அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.