சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2020-11-17 00:51 GMT
சென்னை, 

கொரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் ரயில் சேவை கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை-திருப்பதி சிறப்பு ரெயில்(வண்டி எண்: 06057) வரும் 19-ந்தேதி காலை 6.25 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 9.40 மணிக்கு திருப்பதி சென்றடையும். 

இதேபோல் திருப்பதி-சென்னை சிறப்பு ரெயில் (06008), வரும் 19-ந்தேதி காலை 10.45 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் வந்தடையும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்