பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை,
11, 12-ம் வகுப்புத் துணைத் தேர்வு விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம், பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 18-ந் தேதி (நாளை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் அதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்ப படிவத்தினை, பூர்த்தி செய்து 19-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-, மறுகூட்டல் உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-, ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-” என்று அதில் கூறப்பட்டுள்ளது.