விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் தகராறு: 3 பேருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் காயம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனால் சம்பவ இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.