தமிழகத்தில் மேலும் 1,912 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,912 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-14 13:04 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும் 1,912 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2,494 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,25,258-ல் இருந்து 7,27,752 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 17,154 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,466 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,762 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 2,07,686லிருந்து 2,08,179 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 17,154 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மேலும் 70,425 மாதிரிகளும், இதுவரை ,10,07,832 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 69,594 பேருக்கும், இதுவரை 1,07,27,683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7,54,460 லிருந்து 7,56,372 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்