தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: குணமடைந்தோர் - 2,572 உயிரிழப்பு - 14

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000க்கு கீழ் குறைந்தது. மேலும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-13 13:11 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2,572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 17,748 ஆக குறைந்தது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 14 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,454 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,758 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 2,07,173லிருந்து 2,07,686 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 26-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 512 பேருக்கு கொரோனா பாதிப்பு பண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 72,629 பேருக்கும், இதுவரை 1,06,58,89 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7,52,521 லிருந்து 7,54,460 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்