செல்வமுருகன் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்
விருத்தாச்சலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
விருத்தாச்சலம் கிளைச் சிறையில் முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரத்தில், போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி செல்வமுருகன் மனைவி பிரேமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும், செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 18ம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.