விபிஎப் கட்டணம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

விபிஎப் கட்டணம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-09 10:05 GMT
சென்னை, 

விபிஎப் கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் கால அவகாசம் குறைவாக உள்ளதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது என திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். விபிஎப் கட்டணம் தொடர்பான பிரச்சனையால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் விபிஎப் என்ற திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்றும், ஒரே ஒரு முறை விபிஎப் கட்டணத்தை செலுத்தும் முறைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே படங்களை வெளியிடுவோம் என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்