தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-11-08 07:24 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்