தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்
தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், 2018 ல் வெளியிடப்பட்ட இறுதிப்பட்டியலிலிருந்து 45 பேர் நீக்கப்பட்டு 85 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்களில் 18 பேருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை மதிப்பெண் பூச்சியம் என இருந்தது, முழு மதிப்பெண்ணான 5 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்றும் நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்க கூடிய உயர் கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான நபர்களின் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தின் வாயிலாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது.