செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மெட்ரோ ரெயிலில் 10.63 லட்சம் பயணிகள் பயணம் - அதிகாரிகள் தகவல்

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மெட்ரோ ரெயிலில் 10.63 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-11-02 08:50 GMT
சென்னை,

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் கடைசி வாரத்தில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து விமானநிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு கடந்த செப்டம்பர் 7-ந்தேதியும், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செப்டம்பர் 9-ந்தேதியில் இருந்தும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. 

இதில் செப்டம்பர் மாதம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 193 பேரும், அக்டோபர் மாதம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 223 பயணிகள் உட்பட 10 லட்சத்து 63 ஆயிரத்து 416 பேர் பயணம் செய்தனர். இதில் 19 ஆயிரத்து 607 பயணிகள் கியுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையையும், 4 லட்சத்து 34 ஆயிரத்து 289 பயணிகள் பயண அட்டை முறையையும் பயன்படுத்தினார்கள். மீதம் உள்ளவர்கள் டோக்கன் பயணச்சீட்டு முறையிலும்பயணம் செய்தனர்.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்