ரூ.5000 கோடியில் சென்னையில், ஈரடுக்கு பாலம் - நிதின் கட்கரி தகவல்

ரூ.5000 கோடியில் சென்னையில், ஈரடுக்கு பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

Update: 2020-10-28 17:26 GMT
சென்னை,

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் விவாதித்தேன்.  நிலக் கையகப்படுத்தல் சிக்கலுக்கு தீர்வு காண உதவுவதாக முதலமைச்சர் கூறினார். 

கூடுவாஞ்சேரி - செட்டிப்புண்ணியம் நெடுஞ்சாலை விரிவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றார். மேலும்  சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.  

மேலும் செய்திகள்