சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா தொற்று
மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
தமிழகத்தில் ஏழை, எளியவர்கள் முதல் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை தொகுதி எம். பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று எனக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.