வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை - தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை
வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை செய்ய, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தற்போது வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். அங்கும் மழை காரணமாக வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாள்களாக பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கூட்டுறவு பசுமைப் பண்ணை காய்கறி கடைகள் மூலம் நாளை முதல் விற்பனை துவங்க உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் நாளையும், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.