மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா

மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Update: 2020-10-19 06:55 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, சாதாரண மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வரை பலரையும் பாதிப்படையச் செய்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். 

சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலும் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு அதிகளவில் கொரோனா பரவுகிறது.

அண்மையில் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திருவாரூர் மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்