திமுக எம்.பி கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2020-10-16 13:04 GMT
சென்னை,

கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அந்நிய செலாவணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்த புகாரில் அடிப்படையில், அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கியதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் திமுக எம்.பி. கவுதமசிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யவும், எம்.பி கவுதம் சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்