வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில் உருவாக்கி பணம் பறிக்க முயற்சி

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில் உருவாக்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-10-16 12:46 GMT
வேலூர்,

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தனது பெயரில் மர்மநபர்கள் போலி இ-மெயில் முகவரி உருவாக்கி உள்ளதாக புகார் அளித்துள்ளார்.  மாவட்ட அதிகாரி ஒருவருக்கு தனது முகவரியில் இருந்து மெயில் வந்துள்ளதாகவும், அதில், எனக்கு சகாயம் செய்யுங்கள் என கூறியிருந்ததையும் அவர் கூறினார்.

ஆட்சியர் பெயரில், தொலைபேசி அழைப்புகள் மூலம், பணம் கேட்ட புகாரில் ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். தற்போது, அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்