கூட்ட நெரிசலை தவிர்க்க: சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கீழ்க்கண்ட பண்டிகை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2020-10-16 00:51 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கீழ்க்கண்ட பண்டிகை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (வண்டி எண்: 06063) இடையே அதிவிரைவு பண்டிகை கால சிறப்பு ரெயில் வருகிற 23, 24, 29-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்படும்.

* மறுமார்க்கமாக நாகர்கோவில்- எழும்பூர் (06064) இடையே அதிவிரைவு பண்டிகை கால சிறப்பு ரெயில் வருகிற 26, 27-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 15, 16-ந்தேதிகளில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

மேற்கண்ட ரெயிலுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்