சென்னையில் 14 ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் - டீசல் விலை
சென்னையில் 14 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, சென்னையில் 14 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.