ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கிறது - கமல்ஹாசன்

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-10-14 04:04 GMT
சென்னை,

கடந்த திங்கள் கிழமையன்று பால் ஆர். மில்கிரோம் மற்றும் ராபர்ட் பி. வில்சன் ஆகிய இரண்டு பேருக்கு, ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தி இதனை குறிப்பிட்டு, “ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்