துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுவதா? - வைகோ கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாநில அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழக அரசின் அனுமதி பெறாமல், மத்திய அரசுக்கு எப்படி நேரடியாகக் கடிதம் எழுதினார்? அல்லது துணைவேந்தர் சூரப்பாவிற்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி அரசு திட்டவட்டமான முடிவு எடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தால், அதன் உலக புகழ் பெற்ற தனித்தன்மை பறிபோய்விடும் என்று கல்வியாளர்கள், அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் கருத்தை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கைக்கு குந்தகம் நேர்ந்துவிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.