முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில், “2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டமைக்காக வாழ்த்துகளைத் தெரிவித்த தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.