ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை குறைத்திருக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை குறைத்திருக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை குறைத்திருக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், “ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 40-45 ஆகக் குறைத்திருக்கும் அரசாணை, பள்ளிக் கல்வித் துறையை மூடிச் சீரழிக்கும்; வேலைவாய்ப்பைப் பறிக்கும்!
ஆசிரியர் வேலை கிடைக்காமல் திண்டாடும் 10 இலட்சம் பேரின் எதிர்காலம் இருளில் மூழ்கும்.
அரசாணையை தமிழக முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.