ஸ்டண்ட் யூனியனில் சேர்க்காததால் விரக்தி - ஸ்டண்ட் மாஸ்டர் மிண்ட் கணேஷ் தற்கொலை முயற்சி

ஸ்டண்ட் யூனியனில் சேர்க்காததால் விரக்தியடைந்த ஸ்டண்ட் மாஸ்டர் மிண்ட் கணேஷ் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Update: 2020-10-10 09:06 GMT
சென்னை,
 
சென்னையை அடுத்த செங்குன்றத்தைச் சேர்ந்தவர் மிண்ட் கணேஷ். இவர் பல்வேறு படங்களில் ஃபைட்டராகவும், ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றியுள்ளார். விதிகளை மீறி படத்தில் நடித்ததாகக் கூறி, இவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டண்ட் யூனியன் நீக்கம் செய்தது.

இதனிடையே தன்னை மீண்டும் ஸ்டண்ட் யூனியனில் சேர்க்குமாறு மிண்ட் கணேஷ் தென்னிந்திய நடிகர்கள் சங்கமான ஃபெப்சியிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச ஃபெப்சி அலுவலகம் சென்ற அவர், விரக்தியில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை தொடர்ந்து தற்போது ஆபத்தான நிலையில் மிண்ட் கணேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்டண்ட் யூனியனில் சேர்க்காததால் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம், திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்