சென்னையில் புதிதாக 1,289 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 85 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,400 ஆண்கள், 2,288 பெண்கள் என மொத்தம் 5,688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,289 பேரும், கோவையில் 550 பேரும், செங்கல்பட்டில் 356 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 23 பேரும், ராமநாதபுரத்தில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை72 லட்சத்து 21 ஆயிரத்து 686 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 3 ஆயிரத்து 290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 39 பேரும், தனியார் மருத்துவமனையில் 27 பேரும் என 66 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேரும், கோவையில் 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருப்பத்தூரில் 4 பேரும், சேலம், திருச்சி, ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், வேலூரில் தலா இருவரும், திருவாரூர், தென்காசி, நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 586 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 516 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் ஆயிரம் பேரும், கோவையில் 511 பேரும், செங்கல்பட்டில் 474 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 369 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.