தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-01 06:12 GMT
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, திரையரங்குகளை 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி அந்த அறிவிப்பு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகள்