முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது 3 பேரும் முழுகவச உடை அணிந்து, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தான் முதன்முதலில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கினோம். ஆரம்பத்தில் 20 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது 2 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 24 ஆயிரத்து 500 பேர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் 3-வது கட்டிடம் முழுவதும் கொரோனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
முழு கவச உடையுடன் கொரோனா நோயாளிகளை சந்தித்த போது, நோயாளிகளுக்கு எங்களை அடையாளம் தெரியவில்லை. நாங்களாகவே அறிமுகம் செய்து கொண்டோம். அப்போது அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனையை தொடங்கி உள்ளோம். இதுவரை அதன் மூலம் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 99.9 சதவீதம் 2-வது முறையாக மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.