அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-30 19:30 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த செப்டம்பர் 16-ந் தேதி சட்டமன்றத்தில் உலகப்புகழ் பெற்ற பொறியியல் தொழில்நுட்பக்கல்வி நிறுவனமான கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படும் என்று சட்ட முன்வரைவை நிறைவேற்றி இருக்கிறது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகக்கல்லூரிகளும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தங்கள் தரத்தை சிறப்பாக பராமரிப்பதால்தான் உலகளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அங்கீகாரம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் இதுவரை வெளியான ஆய்வுகளை அளவுகோலாக வைத்துதான் சிறந்த ஆய்வு மையத்துக்கான ‘ஹை இன்டக்ஸ்’ மதிப்பெண் வழங்கப்படும். பெயர் மாறினால் அந்த மதிப்பெண் பூஜ்ஜியமாகிவிடும்.

அண்ணா பல்கலைக்கழகம்தான் தமிழக மாணவர்களின் என்ஜினீயரிங் கனவுக்கு உயிர் ஊட்டுகிறது. எனவே கல்வியாளர்கள் கருத்துகளைக்கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் முடிவை கைவிட்டு, இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளை புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை சூட்டுவதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்