தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோர தாண்டவத்தை நடத்தி வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை யாரும் கொரோனாவுக்கு விதிவிலக்கல்ல.
இந்த நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் (வயது 68) உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவர் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு கொரோனா என்ற தகவலால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவலால் தேமுதிக கட்சி நிர்வாகிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.