அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்: கொலை செய்யப்பட்ட செல்வத்தின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கொலை செய்யப்பட்ட செல்வத்தின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் கடத்தப்பட்டு, இளைஞர் த.செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் அராஜகங்கள், அந்த மாவட்டம் இன்னும் தமிழகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா அல்லது அ.தி.மு.க. - ஒரு சில உள்ளூர் போலீசார் கூட்டணியால் தனித் தீவாக மாறி விட்டதா? என்ற மிகப்பெரிய சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.
அப்பாவி இளைஞரைப் பறிகொடுத்த குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் மிரட்டப்படுவதும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் கொலையை மறைக்க அரங்கேற்றப்படும் கொடும் நிகழ்வுகளாகவே தெரிகின்றன. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதும், தூத்துக்குடி மாவட்டம் அமைதியின்மையின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், மக்களும் போராடி வருகின்ற நிலையில், அதுபற்றி அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை, நியாயம் கிடைக்கப்பாடுபடுவோரை “ரவுடியிசம்” மூலம் அச்சுறுத்தத் துணைபோவது, செல்வம் கொலையில் மேலும் பிடிபடாமல் உள்ள உண்மையான குற்றவாளிகள் வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகளையும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், உடனடியாகக் கைது செய்யவேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியையும், சட்டம் - ஒழுங்கையும் நிலைநாட்டி பொதுமக்களைப் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
இந்த ஆட்சி நாளை மாறும். ஆனால் தமிழகக் காவல்துறை, மக்களின் நன்மதிப்பைப் பெற்று, எப்போதும் நடுநிலை வகித்து, எவர் பக்கமும் சாய்ந்துவிடாமல், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டிட வேண்டிய பொறுப்புள்ள துறை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறைத் தலைவர் ஜே.கே.திரிபாதி, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரணமான சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
செல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கி, அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கனிமொழி எம்.பி. கண்டனம்
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை பயங்கர ஆயுதங்களோடு வந்த மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். காவல் துறையினரே கூலிப்படையினர் போல செயல்படுவதால், ரவுடிகள் அச்சமின்றி குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
உட்கட்சி மோதல்களில் முழு கவனத்தையும் செலுத்தும் முதல்-அமைச்சர், சட்டம் - ஒழுங்கையும் கவனிப்பாரா?.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.