நங்கநல்லூரில் சுவர் விளம்பரம் எழுதுவதில் தி.மு.க-பா.ஜ.க. இடையே மோதல் 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்
நங்கநல்லூரில் சுவர் விளம்பரம் எழுதுவதில் தி.மு.க-பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். பா.ஜ.க.வினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் வோல்ட்ஸ் காலனி 50 அடி சாலையில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க.வினர் தனியார் சுவரில் விளம்பரம் செய்திருந்தனர். மோடி பிறந்த நாள் விழா முடிந்ததும், அந்த சுவர் விளம்பரத்தை தி.மு.க.வினர் அழித்துவிட்டு தங்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை குறித்த விளம்பரத்தை எழுதி இருந்தனர்.
இதை பார்த்த பா.ஜ.க.வினர், நேற்று காலை தி.மு.க. எழுதி இருந்த சுவர் விளம்பரத்தை சுண்ணாம்பு அடித்து அழிக்க முயன்றனர். இதனை கண்ட தி.மு.க. பகுதி செயலாளர் என்.சந்திரன் மற்றும் தி.மு.க. வினர், சுவர் விளம்பரத்தை ஏன் அழிக்கிறீர்கள்? என அவர் களை தட்டிக்கேட்டனர்.
இதனால் தி.மு.க-பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த 167-வது வட்ட தி.மு.க. செயலாளர் நடராஜன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் அங்கிருந்த பா.ஜ.க. மகளிரணியை சேர்ந்த மீனாட்சி, சரஸ்வதி ஆகியோர் கால்களில் ஏறியதாக தெரிகிறது. இதில் இருவரும் லேசான காயம் அடைந்தனர். இருவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அங்கிருந்த பா.ஜ.க.வினர் நடராஜனை தண்ணீர் பாட்டிலால் தாக்கினர். பதிலுக்கும் நடராஜனும் அவர்களை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க.வினர் ஒன்று திரண்டு நடராஜனை ஓடஓட விரட்டி தாக்கினர். இதில் அவரும் காயம் அடைந்தார். போலீசார் காயங்களுடன் நடராஜனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சாய் சத்யன், பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், பொது செயலாளர் சிவக்குமார், மாவட்ட வக்கீல் அணி தலைவர் ராஜராஜன், மாவட்ட தமிழர் அணி தலைவர் இன்பராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவித்தனர்.
உடனே தி.மு.க. நகர செயலாளர்கள் என்.சந்திரன், குணாளன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் உள்பட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரும் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர், உதவி கமிஷனர் ஜீவானந்தம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் குவிந்தனர்.
இரு தரப்பிலும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினார்கள். போலீசார் இரு தரப்பினரிடமும் பேசினார்கள். சுவர் உரிமையாளரின் அனுமதி பெறாமல் யாரும் எழுதக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால் பா.ஜ.க.வினர் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர். அவர்களிடமும் போலீசார், இதுபற்றி புகார் மனு தந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்படி பா.ஜ.க.வினர் புகார் மனு கொடுத்தனர். ஆனாலும் அங்கிருந்து கலைந்து போகாமல் இருந்தனர்.
இதையடுத்து போலீசார் பா.ஜ.க.வினர் 35 பேரை கைது செய்து ஆலந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தி.மு.க. வட்ட செயலாளர் நடராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.