முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 65).

Update: 2020-09-20 23:21 GMT
திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 65). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் குளியல் அறையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1996-ம் ஆண்டு த.மா.கா. சார்பிலும், 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சிவராஜ் வெற்றி பெற்றார்.

தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு அமுதா என்கிற மனைவியும், பிரபு என்கிற மகனும், வாணி என்கிற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்