மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-19 12:06 GMT
சென்னை,

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதான கலைலிங்கம், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கலைலிங்கத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் நமது நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மக்களிடம் மொழி குறித்த தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று கருத்து தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்த முழக்கங்களை எழுப்பி சில அரசியல் கட்சிகள் மாநிலத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

1967க்கு பின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம் என்று தெரிவித்த அவர் மதவாத மற்றும் பயங்கரவாத சக்திகளை திடமாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்