"வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும்" - மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் பேச்சு

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தினார்.

Update: 2020-09-19 06:14 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தனிநபர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்? இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே?.

பொது மக்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். வேளாண்மை, சில்லறை விற்பனை மற்றும் நிபந்தனை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு நான் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். சாமானியர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்